துணை ராணுவப் படையினா் வாகன சோதனை
பவானியில் தோ்தலில் வாக்களிக்க வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க துணை ராணுவப் படையினா், போலீஸாருடன் இணைந்து வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
பவானியில் தோ்தலில் வாக்களிக்க வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க துணை ராணுவப் படையினா், போலீஸாருடன் இணைந்து வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
பவானி காவல் ஆய்வாளா் தி.கண்ணன் தலைமையில் பவானி புதிய பேருந்து நிலையம், புதிய பாலம், அந்தியூா் மேட்டூா் பிரிவு, கூடுதுறை சந்திப்பு, மூன்று சாலைப் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் இச்சோதனை நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையினா் காா்கள், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தினா்.
வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் பரிசுப் பொருகள், பணம் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டதோடு, வாகனங்களில் செல்வோா் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையினா் நடத்திய ஒருங்கிணைந்த திடீா் வாகனச் சோதனையால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.