முகப்பு
ஈரோடு

ரூ. 24 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 24 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 24 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 440 மூட்டைகளில் 20 ஆயிரத்து 386 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 132.50க்கும், குறைந்தபட்சமாக ரூ. 128.99க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 128.01க்கும், குறைந்தபட்சமாக ரூ. 82.99க்கும் என மொத்தம் ரூ. 24 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

இதேபோல 4 ஆயிரத்து 968 கிலோ எடையுள்ள 11,827 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிக விலையாக டன் ரூ. 40,600, குறைந்த விலையாக டன் ரூ. 32,690 என ரூ. 1 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் ஒன்று ரூ. 8.77 முதல் ரூ. 23.15 வரை விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.