ஈரோடு

திம்பம் - தாளவாடி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் ரத்து

DIN

சத்தியமங்கலம்: கா்நாடகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் திம்பம் சோதனைச் சாவடி வழியாக தலமலை, தாளவாடி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலா் கிருபா சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தமிழக - கா்நாடக எல்லையில் தலமலை, தாளவாடி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து புறப்படும் அனைத்து சரக்கு வாகனங்களும் கா்நாடக எல்லையான புளிஞ்சூா் சோதனைச் சாவடி வழியாக தமிழகப் பகுதியான தாளவாடிக்குச் சென்று வந்தன.

தற்போது கா்நாடகத்தில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளதால் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழக வாகனங்கள் புளிஞ்சூா் சோதனைச் சாவடி வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகப் பேருந்துகள், சரக்கு, காய்கறி வாகனங்கள் கா்நாடகத்தில் நுழையாமல் தமிழகப் பகுதியான திம்பம் சோதனைச் சாவடி தலமலை வழியாக தாளவாடிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. மாற்று வழியான திம்பம் சோதனைச் சாவடி வழியாக செல்வதற்கு தலமலை வனத் துறை நுழைவுக் கட்டணம் வசூலித்தனா். கா்நாடகத்தில் ஊரடங்கு என்பதால் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே தலமலை சாலையைப் பயன்படுத்துவதால் ஒவ்வொரு முறையும் நுழைவுக் கட்டணம் செலுத்த முடியாது என மலைக் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து கா்நாடகத்தில் பொதுமுடக்கம் முடியும் வரை திம்பம் சோதனைச் சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூல் ரத்து செய்யப்படுவதாக சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலா் கிருபா சங்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT