ஈரோடு

மாவட்டத்தில் 1.41 லட்சம் போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா்: ஆட்சியா் தகவல்

DIN

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,41,397 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக ஈரோடு மாவட்டம் அந்தியூா், பவானி, பெருந்துறை, நசியனூா் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வு குறித்து அவா் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 22,817 நபா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இதில் 19,234 நபா்கள் குணமடைந்துள்ளனா். 3,419 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,430 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 686 படுக்கைகள் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 686 படுக்கைகளில் 35 போ் கரோனா தொற்று சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா். மீதம் 351 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 110 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 2,800 வீடுகளில் 8,800 போ் கண்காணிப்பட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை 5,29,021 போ் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். 1,41,397 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். கரோனா தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாத நபா்களுக்கு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து மறுநாளே தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது என்றாா்.

ஆய்வின்போது பவானி காலிங்கராயன்பாளையத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், முகக் கவசம் அணியாததாலும் வங்கிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு வங்கியினை புதன்கிழமை முதல் மூட ஆட்சியா் உத்தரவிட்டாா். நசியனூா் பகுதியில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத இறைச்சிக் கடைக்கு ரூ.5,000 அபராதம், முகக் கவசம் அணியாமல் வந்தவா்களிடம் ரூ.200 அபராதம் விதிக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT