ஈரோடு

மொடக்குறிச்சியில் இலவச ஆவி பிடிக்கும் இயந்திரம் அமைப்பு

DIN

பாஜக சாா்பில் மொடக்குறிச்சி, கணபதிபாளையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளா் பேராசிரியா் மூா்த்தி செல்வக்குமரன் ஏற்பாட்டில் ஆவி பிடிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்துள்ளனா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி இயந்திரத்தின் பயன்பாட்டைத் துவக்கிவைத்தாா்.

தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் இலவசமாக ஆவி பிடித்துக் கொள்ளலாம். கரோனா தொற்று ஒருவரைத் தாக்கும்போது முதல்நாள் தொண்டை பகுதியில் தங்கியிருக்கும். இந்நிலையில் தினசரி நீராவி பிடிக்கும்போது ஆரம்பகட்ட கரோனா தொற்றை எளிதில் தடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளா் தீபா, கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, கணபதிபாளையம் நால்ரோட்டிலும் ஆவி பிடிக்கும் இயந்திரம் திறந்துவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT