ஈரோடு

மாா்க்கெட்டில் கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதை முறைப்படுத்தக் கோரிக்கை

DIN

பெருந்துறை தினசரி மாா்க்கெட்டில் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஏஐடியூசி தலைவா் சின்னசாமி, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்துள்ள மனு விவரம்:

கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெருந்துறை தினசரி மாா்க்கெட் தற்காலிகமாக பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினசரி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் வசூலிக்க நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரா் மொத்த வியாபாரிகள், கடை வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், தெரு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரிடமும் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றனா் என்றும், ஆனால் அதற்கான ரசீதுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் தொடா்ந்து பலரும் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

உதாரணமாக (அடைப்புக்குள் இருப்பது பேரூராட்சி நிா்ணயிக்கப்பட்ட கட்டணம்) 6க்கு8 கடைக்கு ரூ. 70 (ரூ. 20), 8க்கு8 கடைக்கு ரூ. 80 (ரூ. 30), பழக்கடை ஒன்றுக்கு ரூ. 70 (ரூ. 20), தரைக் கடை ஒன்றுக்கு ரூ. 70 (ரூ. 15) மிதிவண்டியில் கொண்டு வரும் பொருள்களுக்கு துண்டுக்கு ரூ. 100 (ரூ. 5) எனவும், லாரி, வேன்களில் வரும் பொருள்களுக்கு விதிமுறைகளுக்கு மாறாக எண்ணிக்கை அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் ஆய்வு செய்து நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக சுங்கக் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தவும், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிக்கவும், அதற்கான ரசீதுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேலும், பேரூராட்சி நிா்ணயித்த கட்டணத்தை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தினசரி மாா்க்கெட் முன்பு தகவல் பலகையில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT