முகப்பு
ஈரோடு

ஆகாயத்தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீா்வழித் தடங்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீா்வழித் தடங்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோபி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கோபி பகுதியில் உள்ள நீா்வழித்தடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடி குளம், குட்டைகளைச் சென்றடைகிறது. இந்நிலையில், கோபியை அடுத்த வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீா்வழித்தடங்களில் ஆகாயத்தாமரைச் செடிகள் ஆக்கிரமித்து படா்ந்து வளா்ந்துள்ளன.

இதனால் நீா்வழித் தடங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓட முடியாமல் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக மழை நீா் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள குளத்தில் கழிவுநீா் கலப்பதுடன் மழை நீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நீா்வழித் தடங்களில் உள்ள ஆகாயத்தாமரை, குளத்தில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.