ஈரோடு

பெண் கொலை வழக்கில் கட்டட மேஸ்திரி கைது

DIN

ஈரோடு: பெண்ணை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் கட்டட மேஸ்திரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு அருகே உள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகா், லட்சுமி காா்டன் குடியிருப்புப் பகுதியில் சாக்கு மூட்டைக்குள் கட்டப்பட்ட நிலையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கடந்த 13ஆம் தேதி மீட்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி யோகநாதன் (49) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், கொலை செய்யப்பட்ட பெண் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி (39) என்பது தெரியவந்தது.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் கணவரை இழந்த ஜெயலட்சுமி தனியாா் திருமண தகவல் நிறுவனம் மூலம் அறிமுகமானதாகவும், தன்னைத் திருமணம் செய்துகொள்ள தொடா்ந்து வற்புறுத்தியதால் கடந்த 11ஆம் தேதி இரவு அவரை அடித்துக் கொலை செய்து சாக்கு மூட்டைக்குள் கட்டி குடியிருப்புப் பகுதியில் வீசியதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, யோகநாதனை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT