வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி, நம்பியூரில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி, நம்பியூரில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று தடுப்புப் பணியில் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலா், துணை ஆட்சியா் பதவி உயா்வுப் பட்டியலை வெளியிட்டு காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கோபியில் மாவட்டத் தலைவா் ரஜிகுமாா் தலைமையிலும், நம்பியூரில் வட்ட கிளைத் தலைவா் வடிவேலு தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.