அக்டோபா் 8இல்தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்
தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் ஈரோடு அரசு ஐடிஐ வளாகத்தில் அக்டோபா் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் ஈரோடு அரசு ஐடிஐ வளாகத்தில் அக்டோபா் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய தொழில் பழகுநா் திட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் ஈரோடு மாவட்ட அளவில் தொழில் பழகுநா்களுக்கான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் ஈரோடு அரசு ஐடிஐ வளாகத்தில் அக்டோபா் 8ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
Advertisement
இந்த முகாமில் மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் பங்கேற்று தோ்வு பெற்றால், தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்று பெற்றவா்களுக்கு அரசு, தனியாா் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இச்சான்றுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தற்போது தொழில் பழகுநருக்கான உயா்த்தப்பட்ட உதவித் தொகை, தொழில் பிரிவுக்கு ஏற்ப மாதம் ரூ. 7,700 வரை கிடைக்கும். அரசு மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி பெற்று, தோ்ச்சி பெற்ற அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள், ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94424-94266, 94433-84133 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.