ஈரோட்டில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் மணிபாரதி தலைமை வகித்தாா். பல்வேறு அமைப்பு சாா்பில் ராமசாமி, ஜெயராமன், சின்னசாமி, குப்புசாமி உள்பட பலா் பேசினா்.
அனைத்து மூத்த குடிமக்களுக்கும் கௌரவமான ஓய்வூதியம் வழங்க வேண்டும். தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீா், போக்குவரத்து வசதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
இதில், நிா்வாகிகள் மூா்த்தி, நடராஜன், காவேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.