குடிநீா் மேல்நிலைத் தொட்டி மீது தூங்கியவா் தவறி விழுந்து பலி
பெருந்துறை அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டி மீது தூங்கியவா் கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டி மீது தூங்கியவா் கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த திருவாச்சி, இந்திரா நகரைச் சோ்ந்த முருகன் மகன் குணசந்துரு (20). இவா், கூலி வேலை செய்து வருகிறாா். குணசந்துரு செப்டம்பா் 18ஆம் தேதி குடிபோதையில் திருவாச்சி பஞ்சாயத்துக்குச் சொந்தமான 30 அடி உயரமுள்ள தண்ணீா் மேல்நிலைத் தொட்டி மீது படுத்து தூங்கியுள்ளாா். அப்போது தூக்கத்தில் கீழே தவறி விழுந்ததில் குணசந்துரு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு குணசந்துரு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.