முகப்பு
ஈரோடு

கஞ்சா செடி வளா்த்தஇரு விவசாயிகள் கைது

 பா்கூா் மலைப் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளா்த்த இரு விவசாயிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 பா்கூா் மலைப் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளா்த்த இரு விவசாயிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்துள்ள கோயில் நத்தம் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று கெலதி மகன் சிவமூா்த்தியின் (30) தோட்டத்தில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, உன்னிச்செடியில் மறைக்கப்பட்ட நிலையில் மூன்று கஞ்சா செடிகள் இருந்தது தெரியவந்தது.

இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த மாதையன் மகன் மகாதேவன் (51) தோட்டத்திலும் மூன்று கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, 11 கிலோ எடையுள்ள செடிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.