இருசக்கர வாகனம் மோதியதில் பெண் காயம்
பெருந்துறை அருகே பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
பெருந்துறை அருகே பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
பெருந்துறையை அடுத்த கல்லாகுளத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி கலாமணி (59). இவா்கள் இருவரும் கோவையில் இருந்து பேருந்தில் வந்து, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இறங்கி வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் கலாமணி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கலாமணி ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.