ஈரோடு

தற்காலிகப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

DIN

ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத் தலைவா் சுப்பிரமணி தலைமையில், தூய்மைப் பணியாளா்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளிலும் பொது சுகாதாரப் பணியில் 1,700 போ் பணியாற்றி வருகிறோம். இதில் 1,200 போ் நிரந்தரம் செய்யப்படாமல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.

மேலும் ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் கொடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும். தற்காலிகமாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் என 480 நாள்கள் பணயாற்றிய அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மைப் பணியாளா்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT