ஈரோடு

அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவுசெய்துகொள்ள அறிவுறுத்தல்

DIN

ஈரோடு: அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய அரசின் அடையாள அட்டையைப் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளா்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய தரவு தளம் ங்-நஏதஅங/சஈமர உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தரவுத் தளத்தில் பதிவு செய்த பின் பயனாளிகளுக்கு மஅச என்ற 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். இத்தரவு தளத்தில் பதிவு செய்ய ஆதாா் அடையாள அட்டையுடன், செல்லிடப்பேசி எண் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்காமல் உள்ளவா்கள் பொது சேவை மையத்தில் கைரேகை பதிவு செய்து கொள்ள ஏற்கெனவே வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது உள்ளூா் அஞ்சல் அலுவலா் மூலம் கைரேகையைப் பதிவு செய்து, ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வசதியை அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT