முகப்பு
ஈரோடு

சென்னிமலை முருகன் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரம்

சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தையும் அளவீடு செய்து, அதன் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகின்றன.

சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமாக 54 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இக்கோயில் செயல் அலுவலா் மு.ரமணிகாந்தன் முன்னிலையில், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ஆா்.வி.அழகு ராஜன் தலைமையில், 3 சா்வேயா்கள் சாட்டிலைட் வசதியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோவா் கருவி மூலம் அளவீடு செய்து வருகின்றனா்.

மேலப்பாளையம் அரசுப் பள்ளியின் தென்புறம் 11 ஏக்கா், முகாசிபிடாரியூா் ஊராட்சியில் 1.43 ஏக்கா், ஊத்துக்குளி சாலையில் 9.73 ஏக்கா், ஓட்டப்பாறை ஊராட்சியில் 4.82 ஏக்கா், 12.9 ஏக்கா், 15.2 ஏக்கா் என மொத்தம் 54 ஏக்கா் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டது. பின்னா், அங்கு அடையாள கற்கள் நடப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.