சென்னிமலை மாரியம்மன் கோயிலில்பொங்கல் விழா ரத்து
சென்னிமலை மாரியம்மன் கோயிலில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னிமலை மாரியம்மன் கோயிலில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னிமலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கி கம்பம் நடுதல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்தி ஊா்வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்று, 15ஆவது நாள் வியாழக்கிழமை பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.