முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

பெருந்துபெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.றை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, செல்லப்பக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் ராஜாமணி (48). இவா், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் சாலையில் உள்ள பால் பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை பிற்பகலில் சென்றுள்ளாா். இருசக்கர வாகனத்தைப் பால் பண்ணை முன்பு நிறுத்திவிட்டு, பால் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லை.

இதையடுத்து, ராஜாமணி, தனது அண்ணன் மயில்சாமியுடன் இருசக்கர வாகனத்தை பல இடங்களில் தேடியுள்ளனா். அப்போது, பெருந்துறை, அண்ணா சிலை அருகில் இவருடைய இருசக்கர வாகனத்தில் இருவா் சென்றதைப் பாா்த்து துரத்தி சென்று, பொதுமக்கள் உதவியுடன் அவா்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் பவானி, பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த மனோகா் மகன் வடிவேல் (38), திருச்செங்கோடு, ராசிபுரம் சாலைைச் சோ்ந்த ரத்தினகுமாா் மகன் இளங்கோ (57) என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.