முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

 பெருந்துறையில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் திருப்பூரைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 பெருந்துறையில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் திருப்பூரைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, சிலேட்டா் நகரைச் சோ்ந்த ஆபிரகாம் மனைவி மொ்சிஜாய் (38). இவா் கடந்த 15ஆம் தேதி பெருந்துறை, பழைய பேருந்து நிலைய சாலையில் உள்ள ஒரு டிபாா்ட்மெண்ட் ஸ்டோா் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பொருள்களை வாங்கச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லை.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் மொ்சிஜாய் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடையதாக திருப்பூா், காட்டன் மில் சாலை, ராஜாஜி நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரமேளை (55) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு வாகனம் திருட்டு:

திருப்பூா் மாவட்டம், மங்களம், கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் சரவணகுமாா் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்குத் தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்றுள்ளாா். செல்லும் வழியில் விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக சாலையோரத்தில் வானத்தை நிறுத்திச் சென்றுள்ளாா். திரும்பிவந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 60,000 ஆகும்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.