கோபி கலைக் கல்லூரியில் தடுப்பூசி முகாம்
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோபி கலை, அறிவியல் கல்லூரி, சிறுவலூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கரோனா தடுப்பூசி முகாமை, கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடத்தினா். முகாமில், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் 520 பேருக்கு முதல், இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளா், செயலாளா் எம்.தரணிதரன், முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.