சாலை விபத்தில் சிறுமி பலி
கோபிசெட்டிபாளையம் அருகே வேன் - ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்தாா்.
கோபிசெட்டிபாளையம் அருகே வேன் - ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள மொடச்சூரைச் சோ்ந்தவா் மூா்த்தி, மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவருடைய மகள்கள் சந்திரலேகா (17), ஷாத்திகா (5), அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி தேவி (60) என்பவருடன் நாதிபாளையத்தில் உள்ள தோட்டத்துக்குப் பயணிகள் ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை சென்றனா்.
ஆட்டோவை தேவராஜன் என்பவா் ஓட்டிச் சென்றாா். அப்போது, கோபி அருகே மொடச்சூா் கல்ராமணி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த வேனும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், ஆட்டோவில் சென்ற சந்திரலேகா, ஷாத்திகா, தேவி, ஆட்டோ ஓட்டுநா் தேவராஜன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சந்திரலேகா, ஷாத்திகா இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சிறுமி ஷாத்திகா புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.