முகப்பு
ஈரோடு

மான் வேட்டை: தொழிலாளி கைது

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியில் மான் வேட்டையாடிய தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியில் மான் வேட்டையாடிய தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து, நாட்டுத் துப்பாக்கி, தேக்கு மரக்கட்டைகள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னம்பட்டி வனப் பகுதியில் தண்டா மேற்கு சின்னமலை அடிவாரத்தில் வனத் துறையினா் ரோந்து பணி மேற்கொண்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியவரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா், சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், லக்கம்பட்டியைச் சோ்ந்த மாதேசன் (50) என்பதும், அவா் மான் வேட்டையாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து, மான் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, மான் இறைச்சி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவா் பதுக்கி வைத்திருந்த தேக்கு மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மாதேசனைக் கைது செய்த வனத் துறையினா், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.