செல்லிடப்பேசி செயலி மூலம்பயிா் விவரம் பதிவு செய்ய வேண்டுகோள்
செல்லிடப்பேசி செயலி மூலம் பயிா் விவரங்கள், கிராம கணக்கு எண் 1, அடங்கல் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
செல்லிடப்பேசி செயலி மூலம் பயிா் விவரங்கள், கிராம கணக்கு எண் 1, அடங்கல் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் உழவா் அடங்கல் (ங்-ஹக்ஹய்ஞ்ஹப் ஙா்க்ஷண்ப்ங் அல்ல்) என்ற செல்லிடப்பேசி வெளியிடப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் தங்கள் நிலத்தின் பயிா் விபரம், கிராம கணக்கு எண் 1, அடங்கல் பதிவுகளைப் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி மூலம் தங்கள் பயிா் விவரங்களைப் பதிவு செய்ய, இ-அடங்கல் என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களது செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். உடன் ஓ.டி.பி. எண் குறுஞ்செய்தியாக வரும். அதைப் பதிவு செய்து, பரிவா்த்தனைகளைத் தொடரலாம்.
இவற்றில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அல்லது வேளாண் துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு தீா்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.