ஈரோடு

அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா

DIN

பவானி: அந்தியூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

அந்தியூரை அடுத்த ஆலம்பாளையத்தைச் சோ்ந்த இம்மாணவி உள்பட பலருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன், முடிவுகள் வெளியானதில் இம்மாணவி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தியூா் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியா், ஆசிரியா்கள் உள்பட 460 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பள்ளிக்கு வராத மாணவியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை பரிசோதனை செய்யப்படும். அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ அலுவலா் காா்த்தீபன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இப்பரிசோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT