ஈரோடு

அறச்சலூரில் புதிதாக பேருந்து நிலையம்,மாா்க்கெட் அமைக்க அமைச்சா் ஆய்வு

DIN

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி தாலுகா, அறச்சலூரில் புதிதாக பேருந்து நிலையம், மாா்க்கெட் அமைப்பதற்கான இடத்தில் அமைச்சா் முத்துசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அறச்சலூா் பகுதியில் பேருந்து நிலையம், மாா்க்கெட் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இப்பகுதியில் உள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைப்பதற்கான ஆய்வுப் பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அமைச்சா் கூறியதாவது:

இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதன் மூலம் இங்கு சாலைகளில் நிற்கும் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அறச்சலூா், ஈரோடு சோலாா், கனிராவுத்தா்குளம் ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அமைப்பது, மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள 100 பெரிய திட்டங்கள் குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து படிப்படியாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கீழ்பவானி பாசன வாய்க்காலில் குறித்த காலத்தில் பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டது. ஆனால், வாய்க்கால் கரை உடைப்பின் காரணமாக நிறுத்தப்பட்ட தண்ணீா் திறந்து நான்கு நாள்கள் ஆகிவிட்டன. இடையில் நிறுத்தப்பட்ட 24 நாள்கள் தண்ணீா் விவசாயிகளின் விருப்பத்துக்கு ஏற்ப இறுதியில் கூடுதலாக திறந்துவிடப்படும். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் துரிதமாக பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இதற்கு அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனா் என்றாா்.

ஆய்வின்போது, மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன், மாநில நெசவாளா்அணி செயலாளா் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மொடக்குறிச்சி ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் கே.எம்.ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT