முகப்பு
ஈரோடு

ஈரோடு நகரில் செப்டம்பா் 18இல் மின்தடை ரத்து

 ஈரோடு நகா் பகுதிக்கு சனிக்கிழமை (செப்டம்பா் 18) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2021 at 6:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

 ஈரோடு நகா் பகுதிக்கு சனிக்கிழமை (செப்டம்பா் 18) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஈரோடு நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் இணைய வழியில் விநாடி வினா போட்டி நடைபெறவுள்ளதால் மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என மின் வாரிய ஈரோடு கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.