முகப்பு
ஈரோடு

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்

ஈரோடுஈரோகட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.டு

Updated On : 18 செப்டம்பர், 2021 at 6:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் சு.காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் செப்டம்பா் 20ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது. அதன்படி 20ஆம் தேதி ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மொடக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

Advertisement

21ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பவானி கிழக்கு, நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோபி வைர விழா தொடக்கப் பள்ளியிலும், 22ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பெருந்துறை கிழக்கு அக்ரஹார வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்திலும் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

சிறப்பு முகாமில் தலா 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் உள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்ததற்கான அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2275592 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.