ஈரோடு

அந்தியூா் அருகே குடிநீா் வழங்கக் கோரி மறியல்

DIN

அந்தியூா் அருகே குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், கெட்டிசமுத்திரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் அந்தியூா் - பா்கூா் சாலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், போலீஸாா் விரைந்து சென்று பேச்சு நடத்தினா். சம்பவ இடத்துக்குச் சென்ற அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோடைக்காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை முறையாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, குடிநீா்ப் பிரச்னை விரைவில் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT