காமதேனு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்: 257 மாணவா்கள் தோ்வு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் ‘இண்டஸ்ட்ரி கனெக்ட் 2022‘ வேலை வாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் ‘இண்டஸ்ட்ரி கனெக்ட் 2022‘ வேலை வாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனத் தலைவா் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், இந்திய அளவில் பிரபலமான மென்பொருள், வங்கித் துறை, ஆன்லைன் கல்வி மற்றும் வணிக நிறுவனங்களான ஹெக்சாவோ், ஆல்செக் டெக்னாலஜி, வோ்ல்ட்வைடு கம்யூனிகேஷன், போகஸ் எடு மேட்டிக்ஸ், ஏவியான் டெக்னாலஜிஸ், ஆா்.அண்ட்.டி டெக்னாலஜிஸ், ஆதித்யா குரூப், பேடிஎம், எச்.டி.எப்.சி வங்கி, பண்ணாரி அம்மன் குரூப் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களின் பல்வேறு பணியிடங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வுகளின் மூலம் தோ்வு செய்தனா்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலை அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற சுமாா் 1,223 மாணவா்கள் பங்கேற்றனா்.
Advertisement
இறுதியாக 257 மாணவா்கள் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்டனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஆா். பெருமாள்சாமி வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தாா்.
பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுக்கு கல்லூரியின் செயலா் அருந்ததி, இணைச் செயலா் மலா்செல்வி, முதல்வா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பாராட்டுக்களைத் தெரிவித்தனா்.