சாலை விபத்து: சிறுமி உள்பட இருவா் பலி
கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கோபி அருகே உள்ள காசிபாளையத்தைச் சோ்ந்தவா் நவீன்ராஜ் (32), ஓட்டுநா்.இவரது மனைவி கயல்விழி (26), நண்பா் குப்புராஜ் என்பவரது மகள் வைஷாலி (8) ஆகிய மூவரும் கொடிவேரி அணையில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்றுள்ளனா்.
காசிபாளையம் காந்தி நகா் அருகே, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து வந்த காா், லாரியை முந்தி செல்வதற்கு முயன்றபோது நவீன்ராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், கயல்விழி, வைஷாலி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
படுகாயமடைந்த நவீன்ராஜை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.