ஈரோடு

சத்தியமங்கலம் அருகே வாகனங்களைக் கண்டு பிளிறிய காட்டு யானை கூட்டம் (விடியோ)

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிகின்றன. 

இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து குன்றி மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் 7 காட்டு யானைகள் சாலையோரம் நின்றிருந்தன. தற்போது சாலையில் செல்லும் வாகனத்தை கண்ட காட்டுயானைகள் கோபத்துடன் தும்பிக்கையை ஆட்டியபடி பிளிறின. 

காட்டு யானைகள் கோபத்துடன் பிளிரும் காட்சியை வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT