ஈரோடு

579 மையங்களில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் 579 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பரவலைத் தடுக்க மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். மேலும், 60 வயது நிறைவடைந்து, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன் களப்பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 579 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில் 2,316 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT