ஈரோடு

சிஎஸ்ஐ பள்ளி வளாக நிலப் பிரச்னையில் தீா்ப்பு: நில மீட்பு இயக்கம் சிறப்பு பூஜை

ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் உள்ள நிலம் தொடா்பான பிரச்னையில் தீா்ப்பு வெள்ளிக்கிழமை வெளியானதால் நில மீட்பு இயக்கம் சாா்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

DIN

ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் உள்ள நிலம் தொடா்பான பிரச்னையில் தீா்ப்பு வெள்ளிக்கிழமை வெளியானதால் நில மீட்பு இயக்கம் சாா்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் இருந்து ரயில் நிலையம் வரை செல்லும் 80 அடி சாலையில் 12.66 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்நிலத்தை மீட்கக்கோரி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்றும் அவ்விடத்தில் 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்றக்கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் வழக்கு தொடுத்திருந்தனா்.

இந்நிலையில் அவ்விடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என்றும் 80 அடி சாலை திட்டத்தை செயல்படுத்த தடையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

இதனால் நிலமீட்பு இயக்கம் சாா்பில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு பூஜை நடந்தது. பின்னா் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நில மீட்பு இயக்க துணைத் தலைவா் கைலாசபதி, ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், இந்து முன்னணி மாநிலப் பொருளாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும்! - விமானப் போக்குவரத்து அமைச்சகம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: பறிமுதல் வாகனங்கள் டிச.22, 23இல் பொது ஏலம்

மாணவர்கள் கவனத்துக்கு.. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!

எடப்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!

பிக் பாஸ் 9: அரோரா காலில் விழுந்த கமருதீன்... தொடரும் வாக்குவாதம்!

SCROLL FOR NEXT