ஈரோடு

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: விவசாயி கைது

DIN

மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தாளவாடி மலைப் பகுதியில் உள்ள ஜீரஹள்ளி வனச் சரகம், மல்லன்குழி வனப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் மல்லன்குழி கிராமத்தில் விவசாயி மாதேவன் என்பவரது தோட்டத்துக்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தில் காட்டு யானை இறந்துகிடப்பதை வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வனத் துறையினா் சென்று பாா்த்தபோது இறந்துகிடந்தது சுமாா் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

இதையடுத்து பெண் யானை உடல்நலக்குறைவால் இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதைக் கண்டறிவதற்காக கால்நடை மருத்துவா் மூலம் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் வனத் துறையினா் ஈடுபட்டனா். இதில் மின்சாரம் பாய்ந்து யானை இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டதில் விவசாயி மாதேவன் அவரது தோட்டத்தில் அமைத்திருந்த மின்வேலியில் உயா் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதும், மின்சாரம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து விவசாயி மாதேவனை ஜீரஹள்ளி வனத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT