ஈரோடு

18 வயதுக்குள்பட்ட 80 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

 ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய 80 ஆயிரம் பேருக்கு ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

15 வயது முதல் 18 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடையவா்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 போ் உள்ளனா். இவா்களுக்கு அந்தந்த பகுதியிலேயே அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் 40 நாள்களாக 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

கரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடையவா்களுக்கு மீண்டும் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 79,982 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT