ஈரோடு

ஒரே நாளில் மல்லிகைப் பூ விலை கடும் சரிவு

DIN

சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மல்லிகைப் பூ விலை ரூ.2,432 இல் இருந்து ரூ. 650 ஆக சரிந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமாா் 40 ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

விவசாயிகள் தோட்டத்தில் விளையும் பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் நேரடியாக விற்பனை செய்கின்றனா்.

கடந்த சில நாள்களாக முகூா்த்தம், சஷ்டி மற்றும் சுப நிகழ்ச்சிகள் காரணமாக மல்லிகைப் பூ விலை அதிகரித்து கிலோ ரூ.2,432க்கும், முல்லை கிலோ ரூ. 2,520க்கும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. சத்தியமங்கலத்தில் விளையும் பூக்கள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில்,

கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் சத்தியமங்கலத்தில் இருந்து கேரளத்துக்கு பூக்கள் அனுப்ப முடியாமல் தேக்கம் ஏற்பட்டது.

மேலும் திருமண நிகழ்ச்சிகள் இல்லாததால் பூக்களின் விலையும் சரிந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு ஒன்றரை டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. இதில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2,432 இல் இருந்து ரூ.650 ஆகவும், முல்லை கிலோ ரூ.2,520 இல் இருந்து ரூ.600 ஆகவும், சம்பங்கி கிலோ ரூ.200 இல் இருந்து ரூ.100 ஆகவும் விலை குறைந்து விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT