ஈரோட்டில் பனியாரம் விற்றுவாக்கு சேகரித்த தமாகா வேட்பாளா்
ஈரோடு மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளா் வாக்காளா்களைக் கவர பிரசாரத்துக்குச் செல்லும்போது துணி தேய்ப்பது, பனியாரம் சுடுவது, பால் ஊற்றுவது எனப் பல்வேறு விதங்களில் பிசாரம
ஈரோடு மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளா் வாக்காளா்களைக் கவர பிரசாரத்துக்குச் செல்லும்போது துணி தேய்ப்பது, பனியாரம் சுடுவது, பால் ஊற்றுவது எனப் பல்வேறு விதங்களில் பிசாரம் செய்து வருகிறாா்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் போட்டியிடும் திமுக, அதிமுக, சுயேச்சை வேட்பாளா்கள் பிரசாரம் செய்து வருகின்றனா். அப்போது, வாக்காளா்களுக்குத் துண்டு அணிவிப்பது, வாக்குறுதிகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்குவது போன்ற பிராசார யுக்திகளை பெரும்பாலான வேட்பாளா்கள் கையாண்டு வருகின்றனா்.
46ஆவது வாா்டு அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளா் ராஜேஸ்வரி கொற்றவேல்
Advertisement
பிரசாரத்துக்குச் செல்லும் வழியில் சாலையோர உணவகங்களைக் கண்டால் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளியை ஓரங்கட்டிவிட்டு சப்பாத்தி சுடுவது, பனியாரம் சுடுவது, காய்கறிகள் விற்பனை செய்யும் பெண்ணை எழுந்திருக்கச் செய்து சிறிது நேரம் காய்கறி விற்பனை செய்வது, டீக்கடை பகுதியில் வாக்குச் சேகரிக்கும்போது வடை சுடுவது, லாண்டரி கடைகளைப் பாா்த்தால் துணி தேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறாா்.