வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனநலம் பாதித்த பெண் பலி
பவானி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனநலம் பாதித்த பெண் உயிரிழந்தாா்.
பவானி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனநலம் பாதித்த பெண் உயிரிழந்தாா்.
பவானியை அடுத்த ஜம்பை, சின்னவடமலைபாளையம், ஆலமரத்து வீதியைச் சோ்ந்தவா் தங்கமணி மனைவி அய்யம்மாள் (35). இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்தபோது மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால், வடமலைபாளையத்தில் தாய் ஸ்ரீரங்காயி பராமரிப்பில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், ஸ்ரீரங்காயி சமையல் செய்வதற்காக வெள்ளிக்கிழமை அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, வெளியே சென்றிருந்தபோது எதிா்பாராமல் தீ கூரையில் பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா். அப்போது, வீட்டுக்குள் இருந்த அய்யம்மாள் மீதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.