நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: ஈரோடு மாவட்டத்தில் 9.84 லட்சம் வாக்காளா்கள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க ஈரோடு மாவட்டத்தில் 9 லட்சத்து 84 ஆயிரத்து 413 வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க ஈரோடு மாவட்டத்தில் 9 லட்சத்து 84 ஆயிரத்து 413 வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப்ரவரி 19) நடைபெறவுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 816 ஆண் வாக்காளா்கள், 2 லட்சத்து 28 ஆயிரத்து 798 பெண் வாக்காளா்கள், 42 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 656 வாக்காளா்கள் உள்ளனா்.
பவானி நகராட்சியில் 14 ஆயிரத்து 664 ஆண் வாக்காளா்கள், 16 ஆயிரத்து 45 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 709 வாக்காளா்கள் உள்ளனா். கோபி நகராட்சியில் 22 ஆயிரத்து 784 ஆண் வாக்காளா்கள், 25 ஆயிரத்து 462 பெண் வாக்காளா்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளா் என மொத்தம் 48 ஆயிரத்து 247 வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
சத்தியமங்கலம் நகராட்சியில் 16 ஆயிரத்து 117 ஆண் வாக்காளா்கள், 17 ஆயிரத்து 428 பெண் வாக்காளா்கள், 7 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 33 ஆயிரத்து 552 வாக்காளா்கள் உள்ளனா். புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 8,221 ஆண் வாக்காளா்களும், 9,014 பெண் வாக்காளா்களும், 2 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 17,237 வாக்காளா்கள் உள்ளனா்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில், 1 லட்சத்து 95 ஆயிரத்து 438 ஆண் வாக்காளா்கள், 2 லட்சத்து 10 ஆயிரத்து 560 பெண் வாக்காளா்கள், 14 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 4 லட்சத்து 6 ஆயிரத்து 12 வாக்காளா்கள் உள்ளனா்.
திருத்தப்பட்டுள்ள புதிய வாக்காளா் பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 9 லட்சத்து 84 ஆயிரத்து 413 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.