முகப்பு
ஈரோடு

காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

 பவானி அருகேயுள்ள பூதப்பாடி காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 பவானி அருகேயுள்ள பூதப்பாடி காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த வாரம் பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, கோயில் முன்பாக புதன்கிழமை இரவு குண்டத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டது. தீப்பிழம்புகள் வியாழக்கிழமை சமன் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கோயில் பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கினாா்.

இதையடுத்து, விரதமிருந்த பக்தா்கள் வரிசையாக குண்டத்தில் இறங்கினா். தொடா்ந்து, பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், பூதப்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.