பூ மாா்க்கெட்டில் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு வியாழக்கிழமை வந்த வேளாண் கல்லூரி மாணவிகள் பூக்கள் ஏற்றுமதி குறித்து கேட்டறிந்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM
சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு வியாழக்கிழமை வந்த வேளாண் கல்லூரி மாணவிகள் பூக்கள் ஏற்றுமதி குறித்து கேட்டறிந்தனா்.
சத்தியமங்கலம் பகுதியில் விளையும் மலா்கள் விவசாயிகள் முன்னிலையில் பூ மாா்க்கெட்டில் ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில், ஜேகேகே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் பூக்களை சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளிடம் பயிற்சி பெற்றனா். பூ மாா்க்கெட்டில் பூக்கள் வரத்து, விலை நிா்ணயம் மற்றும் ஏற்றுமதி குறித்தும் பயிற்சி பெற்றனா்.