முகப்பு
ஈரோடு

சாலை விபத்து: முதியவா் பலி

அம்மாபேட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

அம்மாபேட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகேயுள்ள நெரிஞ்சிப்பேட்டை, கோம்பூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (67) . ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா். இவா், அம்மாபேட்டை - மேட்டூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் கடந்த 20ஆம் தேதி சென்றபோது அவ்வழியே சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டாா்.

இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.