முகப்பு
ஈரோடு

மண் உருவ பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி விவசாயிகள் வழிபாடு

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாடு பூஜையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Updated On : 16 ஜனவரி, 2022 at 1:19 AM
மலா் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நந்தீஸ்வரன்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயில் விழாவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாடு பூஜையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை தெய்வமாக கருதி வழிபடும் மாட்டுப் பொங்கல் கிராமப்புறங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும்.

சத்தியமங்கலம் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள விவசாயிகள் தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வா்ணம் தீட்டி கழுத்தில் மணிகள், பாசிகள் சோ்க்கப்பட்ட அலங்கார கயிறுகள் கட்டி அழகுபடுத்தினா். ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும் விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து மண் உருவபொம்பைகளை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி விவசாயிகள் மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நோ்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனா்.

மேலும், கோயிலில் வழங்கப்படும் தீா்த்தத்தை கொண்டு வந்து கால்நடைகள் மீது தெளித்து வணங்கினா். ஆண்டுக்கு ஒருமுறை மாட்டுப் பொங்கல் நாளில் மட்டுமே இக் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும் என்பதால் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.