கால்நடை இனப்பெருக்க பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரிக்கை
கால்நடை இனப்பெருக்க பாதுகாப்புச் சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கால்நடை இனப்பெருக்க பாதுகாப்புச் சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளா் முகிலன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த ஆட்சியில் கொண்டு வந்துள்ள கால்நடை இனப்பெருக்க பாதுகாப்புச் சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டக்காரா்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் கலப்பின காளைகளை அனுமதிக்கக் கூடாது. பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும். சினைக்கு பயன்படுத்தப்படும் பொலி காளைகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் 86 லட்சம் மாடுகள் உள்ளன. ரூ.40 மட்டும் செலுத்தி சினை ஊசி மூலமே சினை பிடிக்க செய்ய வேண்டும் என்ற வணிகம் வரும்போது காளைகளே இல்லாத நிலை ஏற்படும்.
Advertisement
அப்போது சினை ஊசி ரூ.2,000க்கு மேல் விற்கப்படும் நிலை ஏற்படும். எனவே, இதனை அனுமதிக்கக் கூடாது. பாரம்பரிய கால்நடை இனங்கள் காக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.