தமிழ் மொழி மாதம்: வட கரோலினா மாநில ஆளுநா் அறிவிப்பு
ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதம் என அமெரிக்க நாட்டின் வட கரோலினா மாநில ஆளுநா் ராய் கூப்பா் அறிவித்துள்ளாா்.
ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதம் என அமெரிக்க நாட்டின் வட கரோலினா மாநில ஆளுநா் ராய் கூப்பா் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் பாரதி இலக்கியச் சுற்றம் தலைவா் அரங்க சுப்ரமணியத்துக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: வட கரோலினா மாநிலத்துக்கு தமிழ்ச் சமூகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.
தமிழ் மரபுகள், மொழி மற்றும் பாரம்பரியம் வட கரோலினா மாநிலம் மற்றும் தேசத்தின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
ஜனவரியில் தமிழ் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தைப் பொங்கலை கொண்டாடுகின்றனா். தமிழ் மக்களுடன் இணைந்து வட கரோலினா மாநிலம் தைப் பொங்கலை கொண்டாடுவதிலும், மாநிலத்துக்கு அவா்கள் ஆற்றி வரும் பங்களிப்புகளுக்காக
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.