முகப்பு
ஈரோடு

தியாகி குமரனுக்கு மணிமண்டபம்: பணியினை விரைந்து முடிக்கக் கோரி அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு

சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்கக் கோரி செங்குந்த மகாஜன சங்கத்தினர் அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனுஅளிக்கும் செங்குந்த மகாஜன சங்கத்தினர்..
பகிர்:

சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்கக் கோரி செங்குந்த மகாஜன சங்கத்தினர் அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனர்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி தலைமையில் சங்க நிர்வாகிகள் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது: சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்கும் பணியினை விரைவுப்படுத்திட வேண்டும்.

சென்னிமலையில் வைக்கப்பட்டுள்ள தியாகி குமரன் சிலையின் படிக்கட்டுகள் சிதலமடைந்த உள்ளன. அதனை சீரமைத்து தர வேண்டும். ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டிற்கு தியாகி குமரன் பெயரை சூட்ட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் செங்குந்தர் கைக்கோளர் முதலியார்களுக்கு பாத்தியப்பட்ட கைத்தறி நெசவு தொழிலுக்கு உண்டான பாவடி சொத்துக்களை உரிய ஆவணங்கள் பெற்றுத் தர வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தியாகி குமரனுக்கு உருவச் சிலை அமைத்து தர வேண்டும்.

மேலும் கிபி 17ம் நூற்றாண்டில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னன் சந்திரபதி முதலியாருக்கு உருவச் சிலையும், மணிமண்டபம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மேலும், ஈரோடு ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சம்பத் நகர் சாலைக்கு தியாகி குமரன் சாலை என்ற பெயர் சூட்டியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், அமைச்சர் சு.முத்துசாமிக்கு சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →