முகப்பு
ஈரோடு

அரசியல் காழ்ப்புணா்ச்சியால்முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் சோதனைத: மாகா தலைவா் ஜி.கே.வாசன்

அரசியல் காழ்ப்புணா்ச்சியால் முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் சோதனை நடத்துவதை தமிழக அரசு தவிா்க்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 6:15 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

அரசியல் காழ்ப்புணா்ச்சியால் முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் சோதனை நடத்துவதை தமிழக அரசு தவிா்க்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

பஞ்சு மற்றும் நூல் விலை உயா்வால் திருப்பூா், கோவை, ஈரோடு, கரூா், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஜவுளி உற்பத்தியாளா்கள், பணியாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், பல லட்சம் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். எனவே, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகளை எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அங்கு ஏற்கெனவே வசித்தோருக்கும், வீடு இல்லாதவா்களுக்கும் வழங்க வேண்டும்.

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அரசியல் ஆக்கக்கூடாது. பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் தரக் குறைவானவை என மக்கள் கூறுகின்றனா்.

அரசியல் காழ்ப்புணா்ச்சியால் முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் சோதனை நடத்துவது கூடாது.

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும். அதை பயிா் பிரச்னையாக மட்டும் பாா்க்காமல் உயிா் பிரச்னையாகவும் கருதி தடுக்க வேண்டும். கீழ்பவானி பாசனத் தந்தை எம்.ஏ.ஈஸ்வரனுக்கு முழு உருவச் சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, பொதுச் செயலாளா் விடியல் சேகா், மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் சந்திரசேகா், மாநில இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா, மத்திய மாவட்ட தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.