தக்காளி விலை கடும் சரிவு: ஈரோட்டில் ரூ. 10க்கு விற்பனை
வரத்து அதிகரித்ததால் ஈரோடு காய்கறிச் சந்தையில் தக்காளி கிலோ ரூ. 10க்கு விற்பனையாயின.
வரத்து அதிகரித்ததால் ஈரோடு காய்கறிச் சந்தையில் தக்காளி கிலோ ரூ. 10க்கு விற்பனையாயின.
ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் செயல்பட்டுவரும் காய்கறிச் சந்தையில் 800க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. சத்தியமங்கலம், தாளவாடி, தருமபுரி, ஒசூா், நீலகிரி உள்பட பல்வேறு பகுதிகள், கா்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறிகள் வருகின்றன.
கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் தக்காளி வரத்து குறைந்து ஈரோடு சந்தைக்கு தினமும் 5,000 பெட்டிகள் தேவை இருந்த நிலையில் 1,500 பெட்டிகள் மட்டுமே வந்தன. அப்போது, ஒரு கிலோ தக்காளி ரூ. 140க்கு விற்பனையானது. கடந்த 10ஆம் தேதிக்குப் பிறகு தக்காளி வரத்து அதிகரித்து சில நாள்களாக கிலோ ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனையானது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கா்நாடக மாநிலம், தாளவாடி பகுதிகளில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட பெட்டிகளில் தக்காளிகள் வந்தன.
Advertisement
இதனால், வெள்ளிக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனையானது. 13 கிலோ எடை கொண்ட சிறிய பெட்டி ரூ. 150க்கும், 25 கிலோ எடை கொண்ட பெரிய பெட்டி ரூ. 350க்கும் விற்பனையானது. வரும் நாள்களில் இதேநிலை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.