முகப்பு
ஈரோடு

மாற்றுத் திறனாளிகள் வாரியக் குழு உறுப்பினா் நியமனம்

தமிழகத்தின் மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினராக அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
ஏ.ஜி.வெங்கடாசலம்
பகிர்:

தமிழகத்தின் மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினராக அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினா்களாக 3 சட்டப் பேரவை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாரியத்தில் உறுப்பினராக அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் இடம் பெற்றுள்ளாா்.

மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளின் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக இவ்வாரியம் இருக்கும். மேலும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், கொள்கைகளை வகுப்பதில் உறுதுணையாகவும் செயல்படும். சட்டங்கள், சட்ட முன்வரைவு மட்டும் திட்டங்களை வகுப்பதில் இவ்வாரியம் ஆலோசனை வழங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.